sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு ஆர்.டி.ஓ., ஆபிசை முற்றுகையிட்டு மனு

/

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு ஆர்.டி.ஓ., ஆபிசை முற்றுகையிட்டு மனு

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு ஆர்.டி.ஓ., ஆபிசை முற்றுகையிட்டு மனு

கோவில்பட்டியில் குடிநீர் கேட்டு ஆர்.டி.ஓ., ஆபிசை முற்றுகையிட்டு மனு


ADDED : அக் 09, 2011 02:37 AM

Google News

ADDED : அக் 09, 2011 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பட்டி: கோவில்பட்டி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மா.கம்யூ., சேர்மன் வேட்பாளர் உட்பட பல வேட்பாளர்கள் ஆர்டிஓ ஆபிசை முற்றுகையிட்டனர்.கோவில்பட்டி நகராட்சியில் பல ஆண்டுகளாக தீராத தலைவலியாக சீவலப்பேரி குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதை மையமாக வைத்து நகரின் ஏதாவது ஒருபகுதியில் போராட்டம், மறியல், முற்றுகை என பொதுமக்களின் ஆதங்கமும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் குடிநீர் பிரச்னை மட்டும் தீர்ந்தபாடில்லை. சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான பகிர்மான குழாய்கள் அடிக்கடி பழுதாகி விடுவதால் தான் குடிநீர் சீராக வருவதில்லை என சம்பந்தப்பட்ட துறையினர் காரணம் சொல்கின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோவில்பட்டி நகரில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மா.கம்யூ., மற்றும் தேமுதிகவினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கோவில்பட்டி நகருக்கு சீவலப்பேரியில் இருந்து கிடைக்க வேண்டிய குடிநீர் முற்றிலும் தடைபட்டு இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரதான பகிர்மான குழாய் பழுதையே காரணமாக தெரிவித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த தேமுதிக மற்றும் மா.கம்யூ., கட்சியினர் கோவில்பட்டி நகருக்கு குடிநீர் வழங்கக்கோரி அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜ், மா.கம்யூ., நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோரது தலைமையில் மறியலுக்கு திரண்டு வந்தவர்களை போலீசார் தடுத்ததையடுத்து, கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிசிற்கு சென்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து கோரிக்கை குறித்த மனுவை ஆர்டிஓ நேர்முக உதவியாளர் ஹாரிசிடம் கொடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆர்டிஓ உதவியாளர் தெரிவித்தார். மேலும் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து திரும்பிச் சென்றனர். இதில் நகராட்சி முன்னாள் சேர்மனும், தற்போதைய சேர்மன் வேட்பாளருமான மல்லிகா, மாதர் சங்க நகர செயலாளர் விஜயலட்சுமி, வேட்பாளர்கள் லட்சுமணன், முத்துலட்சுமி, ஜோதிபாசு, டேனியல், முத்துகிருஷ்ணன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us