sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

/

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்


ADDED : அக் 13, 2011 05:40 AM

Google News

ADDED : அக் 13, 2011 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதூர்: உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்- வேட்பாளர்கள், ஓட்டுப் பதிவுநாள் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முகவரை நியமித்துக் கொள்ள உரிய படிவத்தில் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகள் பட்டியல் நகலை வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேர்தல் முகவர் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம். ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு வசதியாக வாக்காளர் பட்டியல் நகலை அவர்களிடம் கொடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்க விரும்பினால், வேட்பாளரின் பெயரையும், சின்னத்தையும் குறிப்பிடாமல் வெள்ளைத்தாளில் வாக்காளர் பற்றிய விபரங்களை மட்டும் எழுதி கொடுக்க வேண்டும். ஓட்டு எண்ணும் இடத்தில் ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு முகவரை நியமிக்கலாம். ஓட்டு எண்ணும் பணியை வேட்பாளர்களும் நேரடியாக கண்காணிக்கலாம். ஓட்டு சேகரிக்கும் போது வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, பணமோ கொடுக்கக் கூடாது.பொது அமைதிக்கும், தேர்தலுக்கும், சட்டம் ஒழுங்குக்கும், மறைமுகமாகவோ, நேரடியாகவோ இடையூறு செய்யக்கூடாது. வாக்காளர்களின் சாதி, மத, இன மற்றும் மொழி உணர்வுகளை தூண்டி ஓட்டு சேகரிக்க கூடாது.

சக வேட்பாளர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும், சொத்து விபரங்கள் குறித்து பிரசாரம் செய்யக் கூடாது. சக வேட்பாளர்களின் தேர்தல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யக்கூடாது. ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் போஸ்டர் ஒட்டவோ, பிரசாரம் செய்யவோ கூடாது. ஒட்டுப்பதிவின் போது ஆள்மாறாட்டம் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் முகவர்கள், ஓட்டுப்பதிவு அலுவலரிடம் புகார் செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள், அனுமதி அடையாள சீட்டு அவசியம் கொண்டு வரவேண்டும்.






      Dinamalar
      Follow us