/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பைக்குகள் மோதி விபத்து; மாணவர் உட்பட இருவர் பலி
/
பைக்குகள் மோதி விபத்து; மாணவர் உட்பட இருவர் பலி
ADDED : டிச 22, 2025 09:39 AM
மெஞ்ஞானபுரம்: பைக்குகள் மோதிய விபத்தில் மாணவர் உட்பட, இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே பிரகாசபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி பீட்டர், 26. அப்பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து, பைக்கில் அந்தோணி பீட்டர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
இந்நிலையில், கல்லுாரி மாணவர்களான சாத்தான்குளத்தை சேர்ந்த நார்மன் ஜோஸ்வா, 18; சுடலைமணி, 19, பெரோஸ்கான், 18, ஆகிய மூவரும் பைக்கில் டிகேசி நகர் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக, அந்தோணி பீட்டரின் பைக்கில், நார்மன் ஜோஸ்வா ஓட்டி வந்த பைக் மோதியது. இதில், அந்தோணி பீட்டர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நார்மன் ஜோஸ்வா நேற்று அதிகாலை உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனர். மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

