/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மணல் திட்டு பிரச்னை பெண்கள் போராட்டம்
/
மணல் திட்டு பிரச்னை பெண்கள் போராட்டம்
ADDED : ஜன 21, 2026 08:49 AM
துாத்துக்குடி: மீன்பிடிக்க தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்ற வலியுறுத்தி, பல்வேறு கடற்கரை கிராமங்களை சேர்ந்த மீனவ பெண்கள், நேற்று ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா, வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராமத்தில், துாண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாததால், கடலில் மணல் திட்டுகள் உருவாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியினர், 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்திய போதிலும், போராட்டம் கைவிடப்படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, 16 மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி, வீரபாண்டியன்பட்டினம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். மீன் ஏலக்கூடத்தில் நடந்த போராட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

