ADDED : செப் 19, 2026 02:10 AM

அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், மேலசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கணேஷ்குமார், 24. செப்., 13ம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் சென்றவர் திரும்பவில்லை.
மறுநாள், ராஜிவ்நகரில் காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கணேஷ்குமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார். புதுக்கோட்டை போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், 'மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கம்பியால் அடித்து, கணேஷ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, தெரியவந்துள்ளது. நண்பர்கள் இருவரிடம் விசாரித்து வருகிறோம்' என்றனர்.
