/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கள்ளக்காதலுக்கு இடையூறால் பள்ளி வாட்ச்மேன் கொலை
/
கள்ளக்காதலுக்கு இடையூறால் பள்ளி வாட்ச்மேன் கொலை
ADDED : ஏப் 10, 2025 01:11 AM
கள்ளக்காதலுக்கு இடையூறால் பள்ளி வாட்ச்மேன் கொலை
வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், பள்ளி வாட்ச்மேன் கொலை நடந்தது, போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் இர்பான், 35. தனியார் நர்சரி பள்ளி வாட்ச்மேன். இவரின் மனைவி ஹாஜிரா, 30. இவரின் தங்கை குப்புரா, 27, இவரின் கணவர் சல்மான், 35. இர்பான் கடந்த, 7 ம் தேதி காலை சைக்கிளில் பள்ளிக்கு சென்றபோது, பள்ளி அருகே, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், இர்பான் மனைவி ஹாஜிராவுக்கும், சல்மானுக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. கணவர் சல்மானை கண்டித்த மனைவி குப்புரா கடந்த, 2 ஆண்டுக்கு முன், சல்மான் மீது, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் இர்பான், தன் மனைவி ஹாஜிராவை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினார். அவர் இன்னும், 6 மாதங்களில் சொந்த ஊர் திரும்ப உள்ளார். அவருடன் குடும்பம் நடத்த திட்டமிட்ட சல்மான், அதற்கு இடையூறாக இருக்கும் இர்பானை, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது. சல்மானை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.