sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பத்தூர்

/

தர்மபுரி கட்டட மேஸ்திரிகள் உட்பட 4 பேர் விபத்தில் பலி

/

தர்மபுரி கட்டட மேஸ்திரிகள் உட்பட 4 பேர் விபத்தில் பலி

தர்மபுரி கட்டட மேஸ்திரிகள் உட்பட 4 பேர் விபத்தில் பலி

தர்மபுரி கட்டட மேஸ்திரிகள் உட்பட 4 பேர் விபத்தில் பலி


ADDED : மார் 10, 2025 11:34 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்; தர்மபுரி கட்டட மேஸ்திரிகள் உட்பட நான்கு பேர், இருவேறு விபத்துகளில் பலியாகினர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, திருமாஞ்சோலையைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 55; பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது நண்பர் குன்னத்துாரைச் சேர்ந்த ராமன், 32; சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தார்.

நாட்றம்பள்ளியில் பந்தல் அமைக்க, இருவரும் மொபட்டில் நேற்று காலை, 8:00 மணியளவில் சென்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி கிராமம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னர் கிருஷ்ணன், 23; பாலக்கோடு அருகே சீரியம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 20; இருவரும் கட்டட மேஸ்திரிகள்.

'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில், ஓசூர் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்றனர். தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சானமாவு கிராமம் அருகே, ஓசூரிலிருந்து தஞ்சாவூர் சென்ற ஆம்னி பஸ் மோதியதில் இருவரும் பலியாகினர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் முத்துகுமார், 47, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us