/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கட்டட கான்கிரீட் கூரை சரிந்து 5 பேர் காயம்
/
கட்டட கான்கிரீட் கூரை சரிந்து 5 பேர் காயம்
ADDED : மே 24, 2024 12:13 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ரோட்டில் கட்டட கான்கிரீட் கூரை சரிந்து 5 பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை திருப்புத்தூர் பகுதியில் மழை பெய்யத்துவங்கியது. அப்போது கண்டவராயன்பட்டி ரோட்டில் பாதி கட்டப்பட்ட பழைய கட்டடத்தின் கீழ் மழைக்காக 15 பேர் ஒதுங்கியுள்ளனர். இரவு 7:30 மணியளவில் கட்டடத்தின் கீழ் மண் இறங்கி அப்பகுதி கான்கிரீட் கூரை சரிந்துள்ளது.
அங்கு நின்றவர்கள் மீது கட்டட இடிபாடுகள் விழுந்தது. அதில் சிக்கியதில் பலரும் காயமடைந்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குழியில் சிக்கியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். காயமடைந்த 5 பேரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் மேல்சிகிச்சைக்காக நால்வர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.