/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வகுப்பில் போதை பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'
/
வகுப்பில் போதை பொருள் 7 மாணவர்கள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 17, 2024 08:28 PM
திருப்பத்துார்:வாணியம்பாடி அருகே, வகுப்பறையில், போதை பொருள் பயன்படுத்திய, 7 மாணவர்கள் ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், மாணவர்கள் சிலர் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே, வகுப்பு ஆசிரியர், மாணவர்களின் புத்தக பையை சோதனையிட்டார்.
அப்போது, ஏழு மாணவர்கள், போதை பொருட்களான கஞ்சா, கூல் லிப்ஸ் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தலைமை ஆசிரியரிடம், வகுப்பு ஆசிரியர் புகார் தெரிவித்தார். அதன்படி, அந்த மாணவர்களையும் ஒரு வாரம், 'சஸ்பெண்ட்' செய்து, தலைமை ஆசிரியர் நேற்று உத்தரவிட்டார்.