/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியால் 7 ரயில்கள் தாமதம்
/
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியால் 7 ரயில்கள் தாமதம்
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியால் 7 ரயில்கள் தாமதம்
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின் கம்பியால் 7 ரயில்கள் தாமதம்
ADDED : மே 28, 2024 08:49 PM
திருப்பத்துார்:கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து, 8:18 மணிக்கு, கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு திருப்பத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, இன்ஜினுக்கு செல்லும் உயர் மின்னழுத்தம் வராததால் ரயில் நடுவழியில் நின்றது.
சந்தேகமடைந்த ரயில் இன்ஜின் டிரைவர், இறங்கி தண்டவாளப் பாதையில் சென்று பார்த்தபோது, மின் கம்பி அறுந்து துண்டாகி, தண்டவாளத்தில் கிடந்தது. இது குறித்து அவர், திருப்பத்துார் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
ஊழியர்கள் அந்த இடத்திற்கு சென்று அறுந்து விழுந்த மின்னழுத்த கம்பியை சரிசெய்தனர். இதனால் அந்த வழியாக சென்ற, ஆலப்புழா எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், கொரக்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட, 7 ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. பயணியர் அவதிக்கு ஆளாகினர்.