/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சித்திக்கு கத்திக்குத்து சிறுவன் சிக்கினார்
/
சித்திக்கு கத்திக்குத்து சிறுவன் சிக்கினார்
ADDED : மார் 01, 2025 02:49 AM
திருப்பத்துார்: சொத்து தகராறில், தி.மு.க., --- பஞ்., தலைவியை, கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். மூன்று ஆண்டுகளுக்கு முன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இவரது மனைவி, பஞ்., தலைவி ஷோபனா, 45, தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவருக்கும், கணவரின் அண்ணன் பாண்டியனுக்கும் சொத்து பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மூன்று மாதங்களுக்கு முன், ஷோபனாவை பாண்டியன் குடும்பத்தார் தாக்கியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாண்டியனின், 17 வயது மகன், ஷோபனாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். உமராபாத் போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை நேற்று கைது செய்தனர்.