/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நகைக்காக மூதாட்டி கொலை பேரன், மருமகள் கைது
/
நகைக்காக மூதாட்டி கொலை பேரன், மருமகள் கைது
ADDED : ஜூலை 06, 2024 11:36 PM
ஆலங்காயம்:திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பலப்பல் நத்தம் ஏரி வட்டத்தை சேர்ந்தவர் அனுமக்காள், 82. கணவனை இழந்து தனியாக வசித்தார். இவர்கள் மகன் சிவராஜ், மகள் சம்பூர்ணம். இருவரும் திருமணமாகி, அதே ஊரில் தனித்தனியாக வசிக்கின்றனர்.
கடந்த, 27ம் தேதி காலை வீட்டில் காது, மூக்கு அறுக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அனுமக்காள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் மகன் வழி பேரன் சிவக்குமார், 32, அனுமக்காளிடம் மது குடிக்க பணம் கேட்டு, அவர் தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்து, மூதாட்டியை தலையணையால் முகத்தை அமுக்கி கொன்றது தெரிந்தது.
பின், நகைகளை கழற்ற முடியாததால், காது, மூக்கை அறுத்து, ஒன்றரை சவரன் நகையை எடுத்துக் கொண்டு மூதாட்டி சுருக்கு பையில் வைத்திருந்த, 350 ரூபாயையும் எடுத்துச் சென்று, நகையை, தாய் மலரிடம் கொடுத்தது தெரியவந்தது. சிவக்குமார், மலர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.