/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பாலாற்றில் நுரை ததும்பும் தொழிற்சாலை கழிவு நீர்
/
பாலாற்றில் நுரை ததும்பும் தொழிற்சாலை கழிவு நீர்
ADDED : ஜூன் 07, 2024 07:44 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, தோல் தொழிற்சாலையின் கழிவு நீர், பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால், நுரை ததும்பிய நிலையில் நீர் ஓடுகிறது.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் மாரப்பட்டு, சோமநாதபுரம், பகுதி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், சோமநாதபுரம் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலைகள், தோல் கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்யாமல், நேரடியாக பாலாற்றில் திறந்துவிட்டுள்ளதால், நுரை பொங்கிய நிலையில், துர்நாற்றதுடன் நீர் பாலாற்றில் செல்கிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், இந்த கழிவு நீரால் குடிநீர் மாசுபாடு ஏற்படும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.