/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தகாத உறவை கண்டித்தவரை கொலை செய்தவர் கைது
/
தகாத உறவை கண்டித்தவரை கொலை செய்தவர் கைது
ADDED : மார் 06, 2025 01:35 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த், 30, இறைச்சி வியாபாரி. இவர் மனைவி துளசி. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 1ம் தேதி குழந்தைகளுடன் அருகே கிராமத்தில் வசிக்கும் தாய் வீட்டுக்கு துளசி சென்றார்.
அன்றிரவு வீட்டில் தனியாக இருந்த ஆனந்த், மறுநாள் காலை கழுத்து, கை நரம்பு அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டிக்கர் கடை நடத்தி வரும் சிலம்பரசன், 30, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
ஆனந்தின் அக்காவுக்கும், சிலம்பரசனுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட ஆனந்தை, சிலம்பரசன் தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆனந்த்தின் அக்கா, சிலம்பரசனுடனான உறவை துண்டித்துக் கொண்டார். இந்த ஆத்திரத்தில் கடந்த, 1ம் தேதி இரவு போதையில் இருந்த சிலம்பரசன், ஆனந்த் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த ஆனந்தை கழுத்து, கை நரம்புகளை பிளேடால் அறுத்து, இரும்பு ராடால் அடித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த், இறந்தார். இதனால், கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இவ்வாறு கூறினர்.