/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாடுகளை வெட்டிய ஆசாமி வீட்டை மக்கள் முற்றுகை
/
மாடுகளை வெட்டிய ஆசாமி வீட்டை மக்கள் முற்றுகை
ADDED : மே 26, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார், கோட்டை தெருவைச் சேர்ந்தவர் நதீம், 40. இவர், சாலையில் திரியும் மாடுகளை கொடூரமாக கத்தியால் வெட்டி காயப்படுத்தி வந்தார். இதுவரை, 10க்கும் மேற்பட்ட மாடுகளை வெட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சாலையில் சுற்றி திரிந்த, மத்தின் என்பவருடைய மாட்டை கத்தியால் வெட்டியுள்ளார். இதை மத்தின் மொபைலில் வீடியோ எடுத்து அப்பகுதி மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த காயம்பட்ட, பிற மாடுகளின் உரிமையாளர்கள், நதீமின் வீட்டை முற்றுகையிட்டனர்.
திருப்பத்துார் டவுன் போலீசார், நதீமை விசாரணைக்கு அழைத்து சென்றதையடுத்து, முற்றுகையை கைவிட்டனர்.