/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தண்டவாளத்தில் தலை வைத்து ஓய்வு ஊழியர் விபரீத முடிவு
/
தண்டவாளத்தில் தலை வைத்து ஓய்வு ஊழியர் விபரீத முடிவு
தண்டவாளத்தில் தலை வைத்து ஓய்வு ஊழியர் விபரீத முடிவு
தண்டவாளத்தில் தலை வைத்து ஓய்வு ஊழியர் விபரீத முடிவு
ADDED : செப் 10, 2024 07:51 PM
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி போயர் வட்டத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சீனிவாசன், 63; கடன் தொல்லையாலும், உடல் பாதிப்புகளாலும் மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் மனைவி ஆனந்தியிடம் மாத்திரை வாங்கி வருவதாக கூறி விட்டு, மொபட்டில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
சோமநாயக்கன்பட்டி-ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிடையே பைரவன் வட்டம் பகுதியில், மொபட்டை நிறுத்திவிட்டு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொண்டார். பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற, வந்தே பாரத் ரயில் ஏறிச்சென்றதில் உடல் சிதறி பலியானார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். பலியான சீனிவாசனுக்கு, இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.