/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வங்கி வாசலில் ரூ.2.45 லட்சம் அபேஸ் ஆந்திர கொள்ளையன் கைது: பணம் மீட்பு
/
வங்கி வாசலில் ரூ.2.45 லட்சம் அபேஸ் ஆந்திர கொள்ளையன் கைது: பணம் மீட்பு
வங்கி வாசலில் ரூ.2.45 லட்சம் அபேஸ் ஆந்திர கொள்ளையன் கைது: பணம் மீட்பு
வங்கி வாசலில் ரூ.2.45 லட்சம் அபேஸ் ஆந்திர கொள்ளையன் கைது: பணம் மீட்பு
ADDED : மே 09, 2024 02:43 AM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் வங்கி அருகே சாதுர்யமாக திருடப்பட்ட ரூ. 2.45 லட்சத்துடன் ஆந்திர கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
திருப்புத்துாரில் மதுரை ரோட்டில் உள்ள அரசுடைமை வங்கி வாசலில், ஏப்.,29ல் மீன் வியாபாரி ஆனந்தனிடம் கீழே கிடந்த பணத்தை எடுக்க சொல்லி, டூ வீலரில் வைத்திருந்த ரூ 2.45 லட்சத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர். டி.எஸ்.பி., ஆத்மாநாதன், சிங்கம்புணரி கிரைம் எஸ்.ஐ., ராஜவேலு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
பல பகுதிகளில் உள்ள 75 கேமராக்களில் இருந்த பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் வங்கிகளை குறிவைத்து இந்த சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. தனிப்படையினர் ஆந்திராவில் விசாரணை செய்த போது, திருட்டுக் கும்பல் தமிழகத்தில் முகாமிட்டிருந்தது தெரிந்தது அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று கீழச்சிவல்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரு டூ வீலர்களில் வந்த 3 பேரை விசாரித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே இருவர் தப்பினர். சிக்கியவரிடம் விசாரிக்கையில் பெயர் அவுலாராகேஷ் 26, என்பதும் ஆந்திர மாநிலம், நல்லுார் அருகே கப்பரல்லி டிப்பா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதும் தெரிந்தது.
டூ வீலரையும் ரூ 2.45 லட்சத்தையும் போலீசார் கைப்பற்றினர். மற்ற திருட்டுக்களில் இவர்களின் பங்கு குறித்தும் விசாரித்தனர். தப்பியோடிய பிரசாத், அமோஸ் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.