/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஆன்லைனில் லோன் தருவதாக வாலிபரிடம் ரூ.56,000 மோசடி
/
ஆன்லைனில் லோன் தருவதாக வாலிபரிடம் ரூ.56,000 மோசடி
ADDED : ஆக 02, 2024 12:06 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், கந்திலியை சேர்ந்தவர் இர்பான், 32. இவரது மொபைல்போனுக்கு நேற்று முன்தினம் தனியார் நிறுவன பைனான்சில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், 'உங்கள் தொலைபேசி எண்ணுக்கு, 3 லட்சம் ரூபாய் லோன் கொடுக்க உள்ளோம். எனவே, தங்களின் ஆதார் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அனுப்புங்கள்' என, கூறியுள்ளார்.
இதை நம்பிய இர்பான், அனைத்து ஆணவங்களையும் அனுப்பினார். பின்னர், 3 லட்சம் ரூபாய் வேண்டுமென்றால், முதலில் டாக்குமென்ட் சார்ஜ் கொடுக்க வேண்டும் எனக்கூறி, 56,000 ரூபாயை பெற்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து, மொபைல் எண், 'சுவிட்ச் ஆப்' ஆகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இர்பான், ஆன்லைனில் மோசடி செய்த நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.