/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாங்காய் விளைச்சல் அமோகம் வியாபாரிகள் ஆர்வமாக கொள்முதல்
/
மாங்காய் விளைச்சல் அமோகம் வியாபாரிகள் ஆர்வமாக கொள்முதல்
மாங்காய் விளைச்சல் அமோகம் வியாபாரிகள் ஆர்வமாக கொள்முதல்
மாங்காய் விளைச்சல் அமோகம் வியாபாரிகள் ஆர்வமாக கொள்முதல்
ADDED : மே 03, 2024 02:40 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டத்தில் கந்திலி, ஜோலார்பேட்டை, திருப்பத்துார், ஆலங்காயம், வாணியம்பாடி, திம்மம்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மா பயிர்களை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இதில், மல்கோவா, அல்போன்சா, காலப்பாடு, செந்துாரா, ஊறுகாய் மாங்காய் என, 30க்கும் மேற்பட்ட வகையிலான மா மரங்கள், 3,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது நல்ல விளைச்சலை கொடுத்துள்ளன.
இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மா விளைச்சல் குறைவாக இருந்த நிலையில், 1 ஏக்கருக்கு, 1 டன் முதல், 3 டன் அளவிற்கே, மாங்காய் விளைச்சல் கிடைத்தது. கடந்தாண்டு குறைவான விளைச்சலால், போதிய வருவாய் கிடைக்காமல், விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.
ஆனால் இந்தாண்டு, சரியான பருவ நேரத்தில் மழை பெய்ததால், பூ பூத்து தற்போது மாங்காய்கள் தரமாக விளைந்து, அறுவடை நடக்கிறது.
இதில், 1 ஏக்கருக்கு, 25 முதல், 30 டன் வரையிலான மாங்காய் அறுவடை செய்யும் நிலை உள்ளது. 1 டன், 15,000 ரூபாய் முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தற்போது, அறுவடையாகும் மாங்காய்கள், கந்திலி அடுத்த பெரியகரம் பெரிய மார்க்கெட்டிற்கு, விற்பனைக்கு எடுத்து வரப்படுகிறது. அங்கு, வியாபாரிகள் கொள்முதல் செய்து, மஹாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும், மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனங்கள், ஜூஸ் தயாரிக்கும் நிறுவனத்தினரும், மாங்காய்களை ஆர்வமுடன் கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர். தற்போது தான், மாங்காய் சீசன் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.
இன்னும், 2 மாத காலம் மாங்காய் அறுவடை என்பதால், மாங்காய் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.