/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சாரைபாம்பை சமைத்து சாப்பிட்டவர் கைது
/
சாரைபாம்பை சமைத்து சாப்பிட்டவர் கைது
ADDED : ஜூன் 13, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 30. இவர், நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல வீடியோவை பதிவு செய்து பரவவிட்டார்.
அதை ஆதாரமாக கொண்டு, திருப்பத்துார் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி, வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையிலான வனத்துறையினர், பெருமாப்பட்டு கிராமம் சென்று, ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், சாரை பாம்பை கொன்று, அதன் தோலை உரித்து சமைத்து சாப்பிட்டது தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர், ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.