/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
கல் குவாரி அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
/
கல் குவாரி அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
கல் குவாரி அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
கல் குவாரி அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 29, 2024 02:53 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி கல்லுாரி பகுதியில், கல் குவாரி அமைக்க, அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ள நிலையில், குவாரி அமைக்க ஆயத்தப்பணிகள் நேற்று நடந்தன.
இதை கண்டித்து, நேற்று, பச்சூர் - குப்பம் சாலையில், கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குவாரி அமைப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும்; அருகே உள்ள கட்டடங்கள், குவாரியில் வெடி வைப்பதால் பாதிக்கப்படும் என, குற்றம் சாட்டினர்.
அவர்களிடம் நாட்றம்பள்ளி போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
முன்னதாக, மறியலால், அப்பகுதியில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.