/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
போனில் பேசியபடி 'டிரைவிங்' மரத்தில் பஸ் மோதி 10 பேர் காயம்
/
போனில் பேசியபடி 'டிரைவிங்' மரத்தில் பஸ் மோதி 10 பேர் காயம்
போனில் பேசியபடி 'டிரைவிங்' மரத்தில் பஸ் மோதி 10 பேர் காயம்
போனில் பேசியபடி 'டிரைவிங்' மரத்தில் பஸ் மோதி 10 பேர் காயம்
ADDED : ஏப் 16, 2025 01:07 AM
ஆலங்காயம்:திருப்பத்துார் அருகே டிரைவர் மொபைல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டியதில், சாலையோர மரத்தின் மீது பஸ் மோதி, 10 பயணியர் காயமடைந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயத்திலிருந்து, 20க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிய எம்.ஆர்., என்ற தனியார் பஸ், வாணியம்பாடி நோக்கி நேற்று காலை, 8:30 மணியளவில் சென்றது.
சுண்ணாம்பு பள்ளம் கிராமம் அருகே சென்றபோது, மொபைல்போன் பேசியபடி ஓட்டிய பஸ் டிரைவர் முருகன், 32, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார்.
அப்போது திடீரென ஸ்டியரிங் துண்டிக்கப்பட்டு, சாலையோர மரத்தின் மீது பஸ் மோதியது.
இதில், பஸ்சில் இருந்த பயணியர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆலங்காயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.