/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பா.ஜ., நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது
/
பா.ஜ., நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஜன 30, 2024 03:30 PM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, வேலுார் மாவட்ட, பா.ஜ., செயலாளரை தாக்கிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டத்திற்கு, பிப்., 1ம் தேதி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான வரவேற்பு பேனர் வைப்பது குறித்து, வேலுார் மாவட்ட, பா.ஜ., மாவட்ட செயலாளர் லோகேஷ், 44, உள்ளிட்ட நிர்வாகிகள், கடந்த, 27 ல் இரவு திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் குளிதிகை பகுதியில் பார்வையிட்டனர். பின், அங்குள்ள தாபாவில் சாப்பிட சென்றனர். அப்போது, அங்கிருந்த, 3 பேர் கும்பல், சரமாரியாக தாக்கியதில், லோகேஷ் படுகாயமடைந்தார். அவர் புகார் படி, ஆம்பூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு, வளத்துார் புதுமனையை சேர்ந்த பாபு, 25, இஸ்மாயில், 24, வசீம், 24, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.