ADDED : மார் 29, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், குப்பத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், 56; கோவில் சிலை வடிவமைக்கும் சிற்பி. அப்பகுதி கிராமத்தில், அம்மன் கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், சிலை செதுக்கும் பணியில் முனிரத்தினம் ஈடுபட்டிருந்தார்.
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, 5 வயது சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்டார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரித்து, முனிரத்தினத்தை போக்சோவில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.