ADDED : நவ 29, 2026 08:02 PM
ஜோலார்பேட்டை: எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய, 8 கிலோ கஞ்சாவை, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று (நவ.,28), காட்பாடியிலிருந்து – சேலம் வரை செல்லும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது, ரயில் பொது ஜன பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில், 8 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
