/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பெரியப்பா உட்பட 4 பேரை வெட்டிய ராணுவ வீரர் கைது
/
பெரியப்பா உட்பட 4 பேரை வெட்டிய ராணுவ வீரர் கைது
ADDED : ஜன 21, 2025 04:51 AM
கந்திலி: திருப்பத்துார் மாவட்டம், காசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முனியம்மாள், 89. இவரது மகன்கள் சின்னராஜ், 65, கோவிந்தராஜ், 60. முனியம்மாளை, கோவிந்தராஜ் பராமரித்து வருகிறார்.
முனியம்மாளை தான் பராமரித்து வருவதால், முனியம்மாளுக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலத்தை அண்ணன் சின்னராஜிற்கு தர மறுத்து, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கோவிந்தராஜ் மகன் பிரபு, 31, ஜம்மு -- காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வரும் நிலையில், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று நிலம் சம்பந்தமாக, சின்னராஜ் குடும்பத்திற்கும், கோவிந்தராஜ் குடும்பத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பிரபு, பெரியப்பா சின்னராஜ், அவரது மனைவி சரஸ்வதி, 48, அவரது மகன்கள் ரஞ்சித்குமார், 34, பார்த்திபன், 31, ஆகிய நான்கு பேரையும் வெட்டியதில், அனைவரும் பலத்த காயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கந்திலி போலீசார் பிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.