ADDED : நவ 13, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்; திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கலீலுார் ரஹ்மான், 50. இவரிடம், பேரணாம்பட்டைச் சேர்ந்த தப்ரேஷ் அஹமது, 45, என்பவர் கடந்த மார்ச் மாதம், தன்னிடம் துபாய் நாட்டு தங்க நகை உள்ளது; விற்பனை செய்யப் போவதாக கூறினார்.
மேலும், பணம் கொடுத்தால், அதை தருவதாக கலீலுார் ரஹ்மானிடம் கூறிஉள்ளார். இதையடுத்து கலீலுார் ரஹ்மான், 80 லட்சம் ரூபாயை தப்ரேஷ் அஹமதுவிடம் கொடுத்து, தங்க நகையை கேட்டார். பணத்தை பெற்ற தப்ரேஷ் அஹமது தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து கலீலுார் ரஹ்மான், திருப்பத்துார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று தலைமறைவாக இருந்த தப்ரேஷ் அஹமதுவை கைது செய்தனர்.

