/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
பண்ணையில் அடுத்தடுத்து 6 பசு மாடுகள் பலி
/
பண்ணையில் அடுத்தடுத்து 6 பசு மாடுகள் பலி
ADDED : ஜன 14, 2024 04:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்பூர்: ஆம்பூர் அருகே பண்ணையில், 6 பசு மாடுகள் சுருண்டு விழுந்து பலியாகின.
திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் அஷ்பக் அஹமத், 43; அங்கியாபல்லி கிராமத்தில், 6 ஏக்கர் விவசாய நிலத்தில், 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அவற்றுக்கு தீனி கொடுத்த நிலையில், அடுத்தடுத்து எட்டு மாடுகள் மயங்கி விழுந்தன. கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்ததில், இரு பசுக்கள் உயிர் பிழைத்த நிலையில், 6 பசுக்கள் பலியாகி விட்டன. கால்நடை பராமரிப்பு துறை மாவட்ட உதவி இயக்குனர் முரளி, கால்நடை மருத்துவர் சங்கீதா உள்ளிட்டோர், பசு மாடு எதனால் பலியானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.