/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு
/
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு
மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் திருட்டு
ADDED : ஜன 25, 2024 01:04 PM
ஆம்பூர் : ஆம்பூர் அருகே, மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகை, மற்றும் வெள்ளி பொருட்கள், 82,000 ரூபாய் திருடு போய் உள்ளது.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகத்தை சேர்ந்தவர் ராமாஞ்சுலு அம்மாள், 65; கணவரை இழந்த அவர், தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, அவரது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த, 15 பவுன் நகை, வெள்ளி நகைகள் மற்றும் 82,000 ரூபாய் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. அவர் புகார் படி, உமாராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.