/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்
/
லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்
லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்
லாரி மீது கார் மோதி விபத்து; மகன் பலி; பெற்றோர் காயம்
ADDED : செப் 30, 2025 08:08 AM
நாட்றம்பள்ளி,; லாரி மீது கார் மோதிய விபத்தில், மகன் பலியான நிலையில், பெற்றோர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த சாந்தி நகரை சேர்ந்தவர் ரவீந்திரன், 54; தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி பிரசன்னா, 45, மகள் காவியா, 23, மகன் அன்னம் ஸ்ரீகிருஷ்ணா சாத்விக், 17. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். ரவீந்திரன், தன் குடும்பத்துடன் காரில், சென்னைக்கு சென்று விட்டு, மீண்டும் குப்பம் நோக்கி நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் திரும்பினார்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில், ரவீந்திரன், பிரசன்னா, அன்னம் ஸ்ரீகிருஷ்ணா சாத்விக் ஆகியோர் படுகாயமடைந்தனர். காவியாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
நாட்றம்பள்ளி போலீசார் அவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அன்னம் ஸ்ரீகிருஷ்ணா சாத்விக் உயிரிழந்தார். ரவீந்திரன், பிரசன்னா சிகிச்சையில் உள்ளனர்.