/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தகராறு செய்த எஸ்.ஐ., மீது வழக்கு
/
தகராறு செய்த எஸ்.ஐ., மீது வழக்கு
ADDED : நவ 22, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம் பசலிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 38. இவர், திருப்பத்துார் - வெங்களாபுரம் சாலையில் பேக்கரி கடை வைத்துள்ளார்.
திருப்பத்துாரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 38; கடலுார் மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.
கடந்த 19ல் குழந்தையுடன், பழனியின் பேக்கரிக்கு சென்று, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தார். அதன் விலை தொடர்பாக பழனிக்கும், பிரகாஷுக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து இருவரும் திருப்பத்துார் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
விசாரித்த போலீசார், இருவர் மீதும் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.