/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
/
சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
ADDED : நவ 04, 2025 01:24 AM
ஓமலுார், தர்மபுரி எம்.பி.,மணியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க, சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று காலை, 9:35 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சேலம் தி.மு.க., எம்.பி.,செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினர் சிவலிங்கம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், நிர்வாகிகளிடமிருந்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கார் மூலம் தர்மபுரி  சென்றார். மீண்டும் தர்மபுரியிலிருந்து மதியம், 12:25 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்த முதல்வர், அதே விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.,செந்தில்குமார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரி, சேலம் எஸ்.பி.,கவுதம்கோயல் ஆகியோர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.