/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
7 வயது மாணவி விழுங்கிய நாணயங்கள் அகற்றம்
/
7 வயது மாணவி விழுங்கிய நாணயங்கள் அகற்றம்
ADDED : செப் 03, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் டவுன், கோட்டை தெருவை சேர்ந்த தொழிலாளி தில்ஷாத். இவரது மகள் நிஸ்பா, 7. இவர், பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், நாணயங்களை வைத்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஒரு ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களை, தவறுதலாக விழுங்கி விட்டார்.
நாணயங்கள் உணவு குழாயில் சிக்கி, வலி தாங்க முடியாமல், மாணவி அலறி துடித்தார். பெற்றோர், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக டாக்டர்கள், நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல், 'எண்டாஸ்கோபி' சிகிச்சை மூலம் அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.