/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஷேர் ஆட்டோவில் சுற்றி ஆடு திருடிய தம்பதி கைது
/
ஷேர் ஆட்டோவில் சுற்றி ஆடு திருடிய தம்பதி கைது
ADDED : பிப் 19, 2025 12:53 AM
வாணியம்பாடி:ஷேர் ஆட்டோவில் ஊர், ஊராக சுற்றி ஆடு திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, திருப்பத்துார் சுற்றுவட்டாரத்தில், பட்டியில் அடைத்து வைக்கும் ஆடுகள், இரவில் திருடு போவது தொடர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் புகார் படி, வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரித்தனர்.
ஆடுகளை பறிகொடுத்தவர்கள், அப்பகுதிகளில் நடக்கும் சந்தைகளில் தேடி பார்த்தனர். நேற்று முன்தினம் கே.வி.குப்பத்தில் நடந்த சந்தையில், திருடு போன ஆறு ஆடுகளை, ஒரு தம்பதி விற்க முயன்றனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஆடு திருட்டில் ஈடுபட்டது, அடுக்கம்பாறையை சேர்ந்த சபரி, 36, அவரது மனைவி நிஷா, 33, என்பதும், இவர்கள் ஷேர் ஆட்டோ வாயிலாக ஊர், ஊராக சுற்றி, ஆடுகளை திருடி விற்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஆறு ஆடுகள், ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.