/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தி.மு.க.,வினர் பிரியாணிக்கு அடிதடி
/
தி.மு.க.,வினர் பிரியாணிக்கு அடிதடி
ADDED : செப் 20, 2024 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த நந்தினி மஹாலில் திருப்பத்துார் மாவட்ட தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இதில், அமைச்சர் வேலு பேசி முடித்தவுடன், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும், மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
மண்டபத்தில் போதுமான டேபிள் வசதி இல்லாததால், பாதிக்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து சாப்பிட்டனர். உணவு பரிமாறிய இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், டேபிளில் அமர்ந்து சாப்பிட்டவர்களை கவனித்த அளவுக்கு, தரையில் அமர்ந்து சாப்பிட்டவர்களை அவர்கள் கவனிக்கவில்லை.
இதனால், உணவு பரிமாறியவர்களை தி.மு.க.,வினர் சரமாரியாக தாக்கினர்.