/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சிறுமிக்கு தொல்லை விவசாயி கைது
/
சிறுமிக்கு தொல்லை விவசாயி கைது
ADDED : மே 21, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குறும்பர்வட்டத்தைச் சேர்ந்தவர் கோபால், 28; விவசாயி. மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், 17 வயது சிறுமியிடம் மொபைல்போனில் காதலிப்பதாக பேசி வந்தார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அவரிடம் பேசுவதை தவிர்த்தார்.
நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு, கோபால் பாலியல் தொல்லை கொடுத்தார். பெற்றோர் புகாரில், போலீசார், கோபாலை போக்சோவில் கைது செய்தனர்.