/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
அரசு துவக்கப்பள்ளியில் தீ ஆவணங்கள் எரிந்து நாசம்
/
அரசு துவக்கப்பள்ளியில் தீ ஆவணங்கள் எரிந்து நாசம்
ADDED : ஜன 22, 2025 01:43 AM
ஆம்பூர்:அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் அரசு துவக்கப்பள்ளி இயங்குகிறது.
அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படுவதால், எட்டு மற்றும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், அரசு துவக்கப் பள்ளியிலுள்ள வகுப்பறையில் படிக்கின்றனர். அங்கு, அந்த மாணவர்களின் வருகை பதிவேடு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருந்தது.
இங்கு, நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டு வகுப்பறையிலிருந்து புகை வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, உமராபாத் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், மாணவர்களின் வருகை பதிவேடு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள், ஆவணங்கள், கம்ப்யூட்டர் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து உமராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.