/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வெள்ளத்தில் அடித்து சென்ற தரைப்பாலம் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
/
வெள்ளத்தில் அடித்து சென்ற தரைப்பாலம் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
வெள்ளத்தில் அடித்து சென்ற தரைப்பாலம் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
வெள்ளத்தில் அடித்து சென்ற தரைப்பாலம் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 05, 2025 01:40 AM
திருப்பத்துார், வாணியம்பாடியில் நேற்று விடிய விடிய பெய்த கன மழையால், பாலாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து, பெரியபேட்டை தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 20 கிராம மக்கள் போக்குவரத்தின்றி தவித்து வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலை, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், விடிய விடிய கன மழை பெய்ததில், ஆங்காங்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால், நோயாளிகள்,
மருத்துவமனை ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
வாணியம்பாடி அடுத்த பெரிய
பேட்டை பாலாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கால், பெரிய
பேட்டையிலிருந்து - கோட்டை பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், பெரியபேட்டை, கொடையாஞ்சி, அம்பலுார், உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ஒரு கி.மீ., துாரம் சுற்றி கடந்து சென்று வருகின்றனர். இதே தரைப்பாலம் கடந்த மாதம், 18ம் தேதி பெய்த கன மழையில், தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு மீண்டும் கடந்த, 24ம் தேதி நகராட்சி சார்பில் சிமென்ட் பைப் அமைத்து, மண் கொட்டி தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இது நேற்று விடிய விடிய பெய்த மழையில் அடித்து செல்லப்பட்டது. ஜவ்வாதுமலையில் பெய்த பலத்த மழையால், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், நீர்வரத்து அதிகமாக உள்ளதால், நீர்வீழ்ச்சியின் அருகே சென்று சுற்றி பார்க்கவும், குளிக்கவும், வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி பதிவான மழைளயவு வருமாறு:
ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷன்-38.20 மி.மீ., ஏ.சி.எஸ்., மில் வடபுதுப்பட்டு-36, ஆலங்காயம்-41, வாணியம்பாடி-64, நாட்றம்பள்ளி-32, கேதாண்டப்பட்டி-60, திருப்பத்துார்-72.60 மி.மீ., என மொத்தம், 343.80 மி.மீ., மழையும், சராசரியாக, 49.11 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது.