/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சரக்கு ரயில் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு
/
சரக்கு ரயில் தடம் புரண்டது போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 02, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்ட காலி சரக்கு ரயில் நேற்று மாலை, 4:00 மணிக்கு, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, திருப்பத்துார் - ஜோலார்பேட்டை கட்டேரி பகுதியில் சென்ற போது, சரக்கு ரயிலின், 17வது பெட்டியின் சக்கரங்கள் பயங்கர சத்தத்துடன் தடம் புரண்டன.
ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டு, காட்பாடியிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், அவ்வழியாக செல்லும் பல ரயில்கள் ஆங்காங்கே வழியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால், சில மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

