/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வீட்டில் பதுக்கிய கஞ்சா கோழி வியாபாரி கைது
/
வீட்டில் பதுக்கிய கஞ்சா கோழி வியாபாரி கைது
ADDED : செப் 25, 2025 02:37 AM
வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே, கோழி வியாபாரி, தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார், அவரை கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி டவுன், ஜீவா நகரை சேர்ந்தவர் ஜான்பாஷா, 42. சண்டைக்கோழி மற்றும் நாட்டுக்கோழி விற்பனை செய்து வருகிறார். இவர், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்படி நேற்று, அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஜான்பாஷாவை போலீசார் கைது செய்து, ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில், சண்டை கோழி விற்பனை செய்யும்போது, கஞ்சாவும் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வியாபாரத்தில் அவருடன், யார், யார் தொடர்பில் உள்ளனர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.