/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
திருப்பத்துார் மாவட்டத்தில் கன மழையால் 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் பாம்பாற்றில் கலப்பு
/
திருப்பத்துார் மாவட்டத்தில் கன மழையால் 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் பாம்பாற்றில் கலப்பு
திருப்பத்துார் மாவட்டத்தில் கன மழையால் 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் பாம்பாற்றில் கலப்பு
திருப்பத்துார் மாவட்டத்தில் கன மழையால் 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் பாம்பாற்றில் கலப்பு
ADDED : செப் 23, 2025 02:09 AM
திருப்பத்துார், :திருப்பத்துார் மாவட்டத்தில் கன மழையால், 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் பாம்பாற்றில் கலந்து வெள்ளமாக ஓடுகிறது.
திருப்பத்துார் மாவட்டம், ஆம் பூர், வாணியம்பாடி திருப்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 49 ஏரிகள் உள்ளன. தற்போது, வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்கிறது. இதேபோன்று திருப்பத்துார் மாவட்டத்தில் திருப்பத்துார், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் கடந்த, 4 நாட்களாக மாலை அல்லது இரவு முதல் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் திருப்பத்துார் மாவட்டத்தில் நீர்நிலைகள் வேகமாக நிரம்ப தொடங்கியது.
தொடர் மழையால் திருப்பத்துார் டவுன் பகுதியில், 151 ஏக்கரில் அமைந்துள்ள பிரதான ஏரியான பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறியது. இதேபோல் பொம்மிகுப்பம், சிம்மனபுதுார் குரும்பேரி, மாடப்பள்ளி, பா.முத்தம்பட்டி கிராமங்களில் உள்ள ஏரி உள்ளிட்ட, 10 ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீர், கால்வாய் வழியாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணைக்கு செல்கிறது. தற்போது கரையோர மக்களுக்கு, வருவாய்த்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்நிலைகளின் அருகே, யாரும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில், 10 ஏரிகள் முழுமையாக நிரம்பிய நிலையில், மற்ற ஏரிகளும் வேகமாக நிரம்புவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.