/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மனைவியை கொன்று நாடகம் கணவன் கைது
/
மனைவியை கொன்று நாடகம் கணவன் கைது
ADDED : செப் 20, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனுாரை சேர்ந்தவர் திருக்குமரன், 40; ரயில்வே துறை கேங்மேன். 10 ஆண்டுக்கு முன் பெரியகம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த அறிவழகி, 34, என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு, 8 வயதில் மகன் உள்ளார்.
தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது. நேற்று முன்தினம் மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவன், தன் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார்.
பின்பு, அவர் தற்கொலை செய்து கொண்டது போல துாக்கில் தொங்க விட்டார். நாட்றம்பள்ளி போலீசார் விசாரித்து, திருக்குமரனை கைது செய்தனர்.