/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
நகை கடைக்காரர் கைது: கர்நாடகா போலீசுக்கு எதிர்ப்பு
/
நகை கடைக்காரர் கைது: கர்நாடகா போலீசுக்கு எதிர்ப்பு
நகை கடைக்காரர் கைது: கர்நாடகா போலீசுக்கு எதிர்ப்பு
நகை கடைக்காரர் கைது: கர்நாடகா போலீசுக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 29, 2025 01:49 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, திருட்டு நகை வாங்கியதாக, நகைக்கடை உரிமையாளரை கர்நாடக போலீசார் கைது செய்ததால், பிற நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர், வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர்கள் சதாம் மற்றும் பிரசாந்த். இருவரும், கர்நாடக மாநிலம், பெங்களூரு சாந்தாபுர போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு, பெண்களிடம் நகைகளை பறித்து வந்தனர்.
இவர்களை சாந்தாபுர போலீசார் கைது செய்து விசாரித்ததில், பறித்த நகைகளை, வாணியம்பாடியிலுள்ள சாந்தி ஜுவல்லர்ஸ் மற்றும் ஷர்மிளா ஜுவல்லர்ஸ் கடைகளில் விற்றதாகக் கூறினர்.
நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சாந்தாபுர போலீசார், வாணியம்பாடியிலுள்ள, ஷர்மிளா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் பாபு என்பவரை விசாரணைக்காக, வாணியம்பாடி டவுன் போலீசார் உதவியுடன் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்து, பாபுவை கைது செய்து அழைத்துச் சென்றதாகக் கூறி, வாணியம்பாடி வணிகர் சங்கத்தினர் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள், வாணியம்பாடி டவுன் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., விஜயகுமார் சமாதானப் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.