/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற நரிக்குறவர் தம்பதி
/
டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற நரிக்குறவர் தம்பதி
டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற நரிக்குறவர் தம்பதி
டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற நரிக்குறவர் தம்பதி
ADDED : பிப் 05, 2025 02:50 AM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரிலிருந்து குடியரசு தினவிழாவில் பங்கேற்க டில்லி சென்ற நரிக்குறவர் தம்பதியினர் பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்முவை சந்தித்தனர்.
டில்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் பார்வையாளராக தமிழக பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரைச் சேர்ந்த நரிக்குறவர் தம்பதி ராஜூ -சுமதி சென்றனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் டில்லி சென்ற தம்பதி 10 நாட்கள் தங்கி குடியரசு தினவிழா அணிவகுப்பை பார்வையிட்டனர். முன்னதாக பிரதமர் மோடி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றனர். அனைத்து பழங்குடியினர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா இவர்களை கவுரவித்தார்.
குடியரசு தினவிழா முடிந்த பின் ஜனாதிபதி மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்ற தம்பதியிடம் ஜனாதிபதி முர்மு அவர்கள் எந்த பழங்குடியினர், எந்த மாநிலம் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து வாழ்த்தினார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்த நரிக்குறவர் இனத்தை பழங்குடியினராக மாற்றும் உத்தரவிலும் ஜனாதிபதி முர்மு தான் கையொப்பமிட்டிருந்தார். பின் இத்தம்பதி டில்லி, ஆக்ரா சுற்றுப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பார்லிமென்ட், தாஜ்மகால், குதுப்மினார், தாமரை கோயில், வீரர்கள் நினைவகம் உள்ளிட்ட பல இடங்களையும் பார்வையிட்டனர்.
இத்தம்பதியினர் கூறுகையில், நினைக்காதது நடந்துள்ளது.
மரியாதையுடன் நடத்தப்பட்டோம். அரசு எங்கள் இனத்தையே கவுரவப்படுத்தியாக நினைக்கிறோம்.
இதை பயன்படுத்தி எங்கள் சமூகத்தை கல்வி, அடிப்படை வசதி, பொருளாதார முன்னேற்றமடைய பாடுபடுவோம்,' என்றனர்.