/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வீட்டில் நகை, பணம் இல்லை ரோஸ் மில்க் குடித்த திருடன்
/
வீட்டில் நகை, பணம் இல்லை ரோஸ் மில்க் குடித்த திருடன்
வீட்டில் நகை, பணம் இல்லை ரோஸ் மில்க் குடித்த திருடன்
வீட்டில் நகை, பணம் இல்லை ரோஸ் மில்க் குடித்த திருடன்
ADDED : பிப் 14, 2025 01:29 AM
வாணியம்பாடி:திருடச் சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால், வீட்டிலிருந்த பாலில் ரோஸ் மில்க் கலந்து குடித்துச் சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பழ வியாபாரி பசல், 40. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி வெளியூர் சென்றிருந்தார்.
நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதில் நகை, பணம் எதுவும் இல்லாதததால், திருட வந்த கும்பல், வீட்டின் பிரிஜ்ஜில் இருந்த பாலை எடுத்து, ரோஸ் மில்க் தயார் செய்து குடித்து விட்டுச் சென்றது தெரியவந்தது. வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.