ADDED : அக் 03, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ராஜாபாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார் மூதாட்டி சந்திரா பாய், 75, இவர், நேற்று காலை, 7:30 மணி வரை வீட்டில் இருந்து வெளியே வராததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டியை சுவற்றில் மோத செய்து கொலை செய்து, கொலையாளிகள் தப்பி சென்றது தெரியவந்தது.
கொலையான மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்தவை திருடப்படவில்லை.
எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என, ஆலங்காயம் போலீசார் விசாரிக்கின்றனர்.