ADDED : ஜூன் 02, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
ஆம்பூர்: மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெயின்டரை, போலீசார் 'போக்சோ'வில் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், மாங்காதோப்பை சேர்ந்தவர் சவுந்தர், 52. பெயின்டர்.
இவர், நேற்று முன்தினம் மாலை, அப்பகுதி அரசு பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
மாணவி கூச்சலிட்டதால், சவுந்தர் அங்கிருந்து தப்பினார்.
ஆம்பூர் டவுன் போலீசார், போக்சோவில் சவுந்தரை, நேற்று கைது செய்தனர்.
