/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மகளின் தாலியை அறுத்து காரில் கடத்திய பெற்றோர்
/
மகளின் தாலியை அறுத்து காரில் கடத்திய பெற்றோர்
ADDED : ஜன 19, 2024 11:41 PM
வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் நர்மதா, 23. இவர், அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் தியாகு, 23, என்பவரை, கடந்த மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். மணமக்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.
நர்மதா, அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த நர்மதாவின் தந்தை ராஜேந்திரன், 'மகளை காணவில்லை' என அம்பலுார் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து, நர்மதாவை கண்டுபிடித்து கடந்த, 7ம் தேதி வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நர்மதா, தன் கணவருடன் செல்வதாக கூறி சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன், பொங்கல் பண்டிகை கொண்டாட, நர்மதா மற்றும் அவரது கணவர் தியாகு, ஆகியோர் பூர்வீக கிராமமான சங்கராபுரம் சென்றனர்.
அங்கு அவர்கள் தங்கியிருந்த போது, கடந்த, 17ம் தேதி இரவு, நர்மதாவின் குடும்பத்தினர் தியாகு வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து நர்மதாவின் தாலியை அறுத்து வீசி, அவரை காரில் கடத்தி சென்றனர்.
செய்வதறியாது திகைத்த தியாகு, அம்பலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்மதாவை கடத்தி சென்ற அவரது அண்ணன், பெற்றோர் மற்றும் நர்மதாவை தேடுகின்றனர்.