/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
/
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
ADDED : அக் 20, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம் புது பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காந்தி, 60. இவரது மனைவி கலைச்செல்வி, 56. இவர்களது மகன் ராஜிவ்காந்தி, 30. இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
காந்தி அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்று பூக்களை பறித்து விற்பனைக்கு, தன் மகனிடம் கொடுத்தனுப்புவது வழக்கம். நேற்று அதிகாலை மழை பெய்ததால், காந்தி பூ பறிக்க செல்லவில்லை. காந்திக்கும், ராஜிவ்காந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜிவ்காந்தி, காந்தியை மண்வெட்டியால் தாக்கியதில் பலியானார். போலீசார் ராஜிவ்காந்தியை கைது செய்தனர்.