UPDATED : நவ 15, 2026 09:40 PM
ADDED : நவ 15, 2026 09:34 PM

அ நிறம் | அளவு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, நெற்களத்தை மீட்டு தரக்கோரி, நெற்கதிர்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள நெற்களத்தை தனிநபர்கள் சிலர் இடித்து ஆக்கிரமித்துள்ளனர். அதனை மீட்டு தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், வாணியம்பாடி – ஆந்திரா பிரதான சாலையில், நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், வாணியம்பாடி தாலுகா போலீசார், வாணியம்பாடி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்திய பின், போராட்டம் கைவிடப்பட்டது.
